Tuesday 2 December 2014

பிரபலங்களை கவர்ந்த ர படம்






புதுமையை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் வெளியாக இருக்கிறது ர படம். அதன் முன்னோட்டமாக சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷனாக படத்தின் பேனர்களை விமானம் மூலம் வானத்தில் பறக்க விட்டனர். விமானியாக இருந்த பிரபு யுவராஜ் என்பவர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விமானியாக இருந்த அஷ்ரப் இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கற்பனை கலந்த த்ரில்லர் படமாக இப்படத்தில் இதுவரை யாரும் எண்ணாத அளவுக்கு புதுவிதமாக முயற்சி செய்துள்ளனர். சென்சார் குழு, பிரபல தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீநிவாஸன், பாக்கியராஜ், இயக்குனர் கோகுல் ஆகியோர் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். ர என்றால் அபகரித்தல் என்று பொருள் உங்களின் இதயங்களை அபகரிக்க விரைவில் திரைக்கு வருகிறது ர.

No comments:

Post a Comment