Wednesday, 24 September 2014

பத்திரிகையாளர்களுக்கு சரத்குமார் ஆதரவு!







சினிமா தோன்றிய காலத்திலேயே அதன் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது பத்திரிக்கைகள் தான். காலப்போக்கில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சினிமாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பல இணையதளங்கள் உருவானது.ஒரு படத்தை விளம்பரப்படுத்த பல இணையதளங்கள் இருக்க, இனி ஒரு சில தொலைக்காட்சி, மற்றும் பத்திரிக்கைகளுக்கு மட்டும் தான் ப்ரஸ் மீட் அனுமதி என்று சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த இணையத்தள விமர்சகர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்க இயக்கத்தின் தலைவர் சரத்குமார் ஒரு கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இதில் “அந்த முடிவு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுதான், நடிகர் சங்கத்தின் முடிவு அல்ல, அவற்றைப் பற்றிக் குழப்பிக் கொள்ள வேண்டாம்,” என்று டுவிட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment