Wednesday, 24 September 2014

பாடகி சின்மயியை கோபப்படுத்திய அஜித், விஜய் ரசிகர்கள்!









சமீப காலமாக இந்த சமுக வலைத்தளங்களில் ரசிகர்களின் மோதல் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக கூட சொல்ல முடியவில்லை.ஒரு படத்தின் டீசர் குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவித்தால், அந்த படத்தின் நடிகருக்கு எதிரான ரசிகர்கள் அந்த பிரபலத்தை வாய்க்கு வந்தது எல்லாம் திட்டி விடுகின்றனர்.அப்படி சமீபத்தில் கத்தி டீசர் குறித்து சின்மயி கருத்து கூறியவுடன், அஜித் ரசிகர்கள் அவரை திட்ட, பின் இது விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே பெரிய வார்த்தை போராகிவிட்டது. இதில் சொல்ல முடியாத பல சென்ஸார் வார்த்தைகளும் அடங்கும்.இதை பொறுமையாக பார்த்த சின்மயி கோபம் தாங்க முடியாமல் மிகவும் மனம் நொந்து ஒரு கருத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் ‘இனி எந்த நடிகர் படத்திற்கும் நல்ல விதமாக கருத்தை கூற கூடாது, நல்ல கலாச்சாரம், நல்ல பேன்ஸ்’ என்று டுவிட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment