Thursday, 25 September 2014

மணிரத்னத்தையே ஒதுக்கிய கதாநாயகி!







தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஜெட்ஜ். இந்த படம் எதிர்பார்த்தது போல் வெற்றியடையாததால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.இதை தொடர்ந்து தற்போது இவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் இவர் கைக்கு வந்துள்ளது.அதில் ஒன்று மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இவரை தான் தேர்ந்தெடுத்துள்ளாராம். ஆனால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.இது குறித்து விசாரித்தால் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அஷ்டோஸ் கௌரிகர், ஹிரித்திக் ரோஷனை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க சம்மதித்து விட்டாரம். அதனால் தான் மணிரத்னம் படத்திலிருந்து ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment