Wednesday, 12 November 2014

வடிவேலு எடுத்த திடிர் முடிவு - எலி என்னாச்சு ?






வைகை புயல் வடிவேலு இம்சை அரசன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இருந்தார்.அதன் பிறகு அவர் பாண்டஸி பின்னணியில் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படம் படு தோல்வியை தழுவியது.இதற்கிடையில் அரசியலில் எதிர் கட்சிக்கு பிரச்சாரம் செய்ததால் அவர் சினிமா வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 வருடம் கழித்து அவர் மீண்டும் சரித்திர பின்னணியில் நடித்த தெனாலிராமன் படமும் சரியாக ஓட வில்லை. இந்நிலையில் அவருக்கு மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க சினிமா வட்டாரத்திலிருந்து அழைப்பு வந்தது, இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தெனாலிராமன் இயக்கிய யுவராஜ் இயக்கத்தில் எலி என்ற படத்தில் நடித்து பிறகு காமெடி வேடத்தில் நடிக்கலாம் என்று இருந்தார்.ஆனால் திடிரென்று பண சிக்கலில் மாட்டிகொண்ட வடிவேலு எலி படத்தை தள்ளிவைத்து விட்டு 3 படங்களை கமிட் செய்துள்ளார். அடுத்தது கார்த்தி, விக்ரம் பிரபு மற்றும் ஜீவா என்று முன்னணியில் இருக்கும் நாயகர்களின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

No comments:

Post a Comment