Friday 21 November 2014

நடிக்க மறுத்து பல்டி அடித்த ஸ்ரீ திவ்யா !!






வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீ திவ்யா. தற்போது காக்கி சட்டை, பென்சில், வெள்ளைகாரத்துரை, ஈட்டி என பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு காட்டுமல்லி, நகர்புறம் ஆகிய இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.ஆனால் அந்த படங்களில் நடிக்க ஸ்ரீ திவ்யா மறுப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீ திவ்யா,படக் குழுவினர்களிடையே நடந்த குழப்பத்தால் தான் படப்பிடிப்பு நின்று போனதாகவும், அதன் பிறகு தயாரிப்பாளர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால் தான் நான் மற்ற படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டேன் என்று பல்டி அடித்து விட்டார்.

No comments:

Post a Comment