Thursday, 30 October 2014

பிரபல நடிகை காதலனுடன் கைது






பிரபல நடிகை சனா கான் மற்றும் அவரது காதலர் இஸ்மாயில் கானும் இன்று போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்து சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல நாளிதழில் சனா கான் மற்றும் இஸ்மாயில் கான் பற்றி தவறான ஒரு கட்டுரை வெளியானது.உடனே இதை பற்றி அறிந்த சனா கான் ஊடகங்களுக்கு தெரியபடுத்திய நபர் யார் என்று விசாரித்த பொது பூனம் கண்ணா என்ற பெண் தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடித்து அவரை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டேன் என்று கங்கணம் கட்டி திரிந்தார்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் உள்ள அந்தேரியில் மருத்தவமனையில் பூனம் கண்ணா நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். பிறகு அவரிடம் சென்று தகராறில் ஈடுபட ஆரம்பித்தனர்.அப்போது இஸ்மாயில் கான், பூனம் கண்ணாவின் கையை பிடித்து முறுக்கியதாகவும், தகாத இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது.இதனால், கலக்கம் அடைந்த பூனம் கண்ணா, இது தொடர்பாக அம்போலி பொலிசில் புகார் செய்ததையடுத்து, பொலிசார் வழக்குபதிவு செய்து, பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நடிகை சனா கானையும், அவரது காதலர் இஸ்மாயில் கானையும் நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment