Tuesday, 28 October 2014

உயிரிழந்த விஜய் ரசிகர் குடும்பத்திற்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய விஜய்!






கத்தி திரைப்படம் வெற்றியடைந்ததில் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.ஆனால், படம் வெளியான அன்று கேரளாவை சார்ந்த ரசிகர் ஒருவர் விஜய் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து கீழே விழுந்து இறந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.இன்று கோவையில் ரசிகர்களை காண சென்ற விஜய் இறந்த உன்னிகிருஷ்னன் குடும்பத்தினருக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். அதுமட்டுமன்றி, ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தார். "எதிர்காலம் குறித்து கவலை வேண்டாம், நான் இருக்கிறேன்" என்று ஆறுதலுடன் கூடிய உறுதி அளித்திருக்கிறார் விஜய்.

No comments:

Post a Comment