சென்னை,
நடிகை கோபிகாவுக்கு ஆஸ்திரேலியாவில் ஆண் குழந்தை பிறந்தது.‘
ஆட்டோ கிராப்
தமிழில் ஆட்டோ கிராப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கோபிகா. பரத்துடன் எம்டன் மகன், சிம்புவுடன் தொட்டி ஜெயா, சுந்தர் சி யுடன் வீராப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.கோபிகாவுக்கும், அயர் லாந்தில் டாக்டராக பணியாற்றிய அகிலேசுக்கும் 2008–ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
ஆண் குழந்தை
இவர்களுக்கு எமி என்ற நான்கு வயது பெண் குழந்தை இருக்கிறது. தற்போது அகிலேஷ் மாற்றலாகி ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகிறார்.கோபிகா 2–வது முறையாக கர்ப்பமானார். அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.உடனடியாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோபிகாவுக்கு நேற்று காலை 10 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
No comments:
Post a Comment