சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 86 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார்.நேற்று அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு அவரச சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
No comments:
Post a Comment