Tuesday, 28 October 2014

பதவி ஆசை குறித்து மனம் திறந்த விஷால்!






தீபாவளிக்கு வெளிவந்த பூஜை படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவது விஷால் சுற்றுப் பயணம் சென்று வருகிறார்.இந்நிலையில் அடுத்து நடிகர் சங்க தலைவராக விருப்பமா? என்று சென்ற இடத்தில் எல்லாம் விஷாலிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த அவர் ‘எல்லா சங்கங்களைப் போல் நடிகர் சங்கமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளில் என்னைப் போன்ற இளம் நடிகர்கள் ஈடுபட்டிருக்கிறோம். நடிகர் சங்கத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் எண்ணம் எனக்கு இல்லை. சங்கத்துக்காக கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment