தனுஷ் பண்முகம் கொண்ட நடிகர் என்று அனைவரும் அறிந்ததே. பாடகர், பாடலாசிரியர் என தொடர்ந்து தன் திறமைகளை ஒவ்வொரு படத்திலும் நிருபித்து வருகிறார்.இதுநாள் வரை தமிழில் மட்டும் பாடி வந்த இவர் முதன் முறையாக கன்னட திரையுலகிலும் பாடவிருக்கிறார். ஹர்ஷா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ‘வஜ்ரகயா’ என்ற கன்னட படத்தின் ஒரு பாடல் ‘ஒய் திஸ் கொலவெறி’ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.‘வஜ்ரகயா’வின் இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, நடிகர் தனுஷை சினிமா விழாக்களில் பலமுறை சந்தித்திருக்கிறாராம். அப்போது, இப்பாடலைப் பற்றி நடிகர் தனுஷிடம் கூறி, பாடுவதற்கு அழைப்புவிடுத்தாராம். தனுஷிற்கும் அந்தப் பாடல் ரொம்பவும் பிடித்துப்போகவே, உடனே சம்மதித்து விட்டாராம்.
Wednesday, 15 October 2014
தனுஷின் அடுத்த கட்ட புதிய முயற்சி!

Labels:
Actor,
Actor Dhanush,
Kollywood
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment