Tuesday, 7 October 2014

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஜெயம்ரவி!






ஜெயம் ரவி நடித்த படங்கள் திட்டமிட்டபடி முடிவதுமில்லை...சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதுமில்லை என்ற கருத்து திரையுலகில் நிலவி வருகிறது. காரணம் அவர் நடித்த ஆதிபகவன் படம் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு பிறகு ஒருவழியாக ரிலீஸ் ஆகி ப்ளாப்பானது. அடுத்து அவர் நடித்த பூலோகம் இன்னும் வெளிவரவே இல்லை. சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நிமிர்ந்துநில் படமோ குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமலே போய், பிறகு ரிலீஸானது. எனவே ஜெயம்ரவியின் படங்கள் குறித்து இப்படியொரு கருத்து பரவிவிட்டது திரையுலகில்.


இந்த கருத்தை மாற்றும் அளவுக்கு மளமளவென தயாராகி வருகிறது ரோமியோ ஜூலியட் படம். லக்ஷ்மன் இயக்கத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி. இப்படத்திற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு நேரத்தில் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. இந்த ரொமான்ஸ் காமெடித் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, இந்தப் படத்தை டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.


இந்தப் படம் தவிர தற்போது 2 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. தன் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து தனி ஒருவன் மற்றும், சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம். இந்தப் படத்திற்காகத்தான் தற்போது தென்காசியில் முகாமிட்டிருக்கிறார் ஜெயம்ரவி.

No comments:

Post a Comment