Tuesday, 14 October 2014

விரைவில் விஜய், அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவேன் - இயக்குனர் ஹரி






தீபாவளி வெளியிடாக வரவுள்ள பூஜை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டார் இயக்குனர் ஹரி.படத்தை பற்றி மட்டுமில்லாமல் விஷாலை பற்றி சில விஷயங்களை கூறினார். அதாவது பூஜை படம் இவ்வளவு சீக்கிரம் முடிய காரணமே விஷால் தான், நான் கூட முதலில் இவர் எப்படி தயாரிப்பு பணியை கவனிக்க போகிறார் என்று யோசித்தேன், ஆனால் அவரின் திட்டமிடுதல் என்னை கவார்ந்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன், விஷால் அன்றைய செலவு கணக்குகளைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும்.அன்றைய கணக்கை அன்றைய தினமே பார்த்தால் தான் எதில் செலவு அதிகமாகிறது என்று தெரியும். செலவு அதிகமானாலோ, குறைவானாலோ தெரிந்து கொள்ளலாம். குறைவானால் படத்தை விளம்பரப்படுத்துவதில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளேன் என்று தெரிவித்தார். நீங்கள் அஜித் விஜய் வைத்து படம் எடுப்பீர்களா என்று கேட்டதற்கு .“எனக்கும் அஜித், விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை தான், விரைவில் அதற்க்கான வேலை நடக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment