Wednesday, 8 October 2014

விஷாலின் முயற்சியால் குஷ்புவுக்கு வர போகும் மிகப்பெரிய பொறுப்பு







நடிகர் சங்க கட்டிட வேலைக்காக ஆர்யா, கார்த்தி, ஜீவா என்று மார்க்கெட்டில் பெரிய சம்பளம் வாங்குகிற ஹீரோக்கள் நால்வரும் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்கள்.இப்படத்தில் வரும் லாபத்தை வைத்து கட்டிட வேலைக்கான அடிக்கல்லை நாட்ட உள்ளனர் விஷாலின் தலைமையில் உள்ள குழு. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் நடிக்க போகும் அத்தனை ஹீரோக்களுக்கும் சம்பளம் கிடையாது, அதுவும் சில நடிகர்கள் வேண்டுமென்றே களத்தில் குதித்து உள்ளனர். சரி ஒரு பிரம்மாண்டம் தயாராக போகிறது இதை வழி நடத்த யாரிடம் பொறுப்பை கொடுப்பது என்ற பலத்த யோசனைக்கு பின் விஷாலுக்கு கிடைத்தது நம்ம சுந்தர். சி தான், எல்லா ஹீரோக்களுக்கும் இதை வழிமொழிய அடுத்து யார் தயாரிக்க போவது என்ற விஷயத்துக்கு வந்தனர்.இதில் முன்னணி லிஸ்டில் இருக்கும் ஹீரோக்கள் நால்வரும் சொந்த தயாரிப்பு கம்பெனி வைத்து உள்ளதால் இதை ஏற்க ஒரு பொதுவான தயாரிப்பு நிறுவனம் தான் தேவை என்று முடிவுக்கு வந்த போது எல்லாருடைய கண்ணும் குஷ்பு மீது தான் இருந்ததாம், சரி நீங்களே தயாரித்து விடுங்கள் என்று குஷ்புவிடம் பொறுப்பை ஒப்படைக்க அவரும் சந்தோஷமாக ஏற்று கொண்டார்.இப்படத்தை அடுத்த ஆண்டு துவக்க உள்ளனர் என்று செய்தி கசிந்துள்ளது.

No comments:

Post a Comment